“டித்வா” சூறாவளியின் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 350 பேரை இதுவரையில் காணவில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த பேரிடர் நிலைகளால் கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
அதிக உயிரிழப்பு
அதன்படி, கண்டி மாவட்டத்தில் இதுவரையில் 118 பேர் உயிரிழந்துள்ளதுடன் 171 பேரை இதுவரையில் காணவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த தினங்களில் நாட்டில் நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேசங்கள் பல சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன.
எவ்வாறாயினும், மத்திய மலைநாடு இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















