வாய்ப்புண்களினால் பலரும் அவதி பட்டிருப்போம். வலியுடன் வரும் சில சமயங்களில் வீக்கங்கள் ஏற்படும்.
இந்த வாய்ப்புண் சரியாக கிட்டதட்ட ஒரு வாரம் பிடிக்கும்.
குறிப்பாக வீட்டிலுள்ள சில பொருள்களை பயன்படுத்தி எப்படி வாய்ப்புண்ணை சரிசெய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
தேன்
தேனில் உள்ள ஆன்டி – மைக்ரோபியல் பண்புகள் உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. இது தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதோடு எரிச்சல் மற்றும் வீக்கங்களைக் குறைக்க உதவுகிறது. அதனால் வாய்ப்புண் இருக்கும்போது இந்த இடத்தில் சிறிது தேன் தடவி விட்டுவிடுங்கள். சில நாட்களிலேயே வாய்ப்புண் சரியாகும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் மிக அதிக அளவில் ஆன்டி – மைக்ரோபியல் பண்புகள் அதிகம் உண்டு. இது உடலில் இருக்கும் காயங்கள் மற்றும் வாய்ப்புண் ஆகியவற்றை சரிசெய்ய உதவுகிறது. இவற்றில் உள்ள மருத்துவப் பண்புகள், வாய்ப்புண், வலி மற்றும் வீக்கத்தை சரிசெய்ய உதவும்.
மஞ்சள்
ஆன்டி – செப்டிக் மற்றும் ஆன்டி – மைக்ரோபியல் பண்புகள் கொண்ட மஞ்சள் பல்வேறு வகையான தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.
வாய்ப்புண்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக இது செயல்படும். இரண்டு சிட்டிகை அளவு மஞ்சளை எடுத்து சில துளிகள் தண்ணீர் விட்டு குழைத்து பேஸ்ட்டாக்கி அதை காலை மற்றும் இரவு படுக்கச் செல்லும்முன் வாய்ப்புண்கள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து வர வேண்டும்.
இப்படி செய்து வரும்போது ஒரு சில நாட்களிலேயே நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.