தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முயற்சியால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனலைதீவு ,எழுவைதீவு மக்களுக்கு எழுதாரகை படகு கிடைக்கப்பெற்றது .
ஆனால் அண்மையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்பு எழுவைதீவு துறைமுகத்தில் கடந்த இரண்டு கிழமைகளுக்கு மேலாக எழுதாரகை படகு போக்குவரத்தின் முக்கியமான துறைமுகப்பகுதியில் தரித்து விடப்பட்டுள்ளது .
இந்நிலையில் ஏனைய படகுகள் ஊடான பயணிகள் போக்குவரத்திற்கு இடையூறு தரும் வகையில் காணப்படுகின்றது.
இதன் காரணமாக வாகனங்களை கொண்டு செல்பவர்கள் மற்றும் பயணிகள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர் .
ஆகவே இதற்கு உரிய அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென தீவக மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
எழுவைதீவு கிராமத்திற்கு ஊர்காவற்துறை கண்ணகி அம்மன் துறைமுகத்தில் இருந்து 9.00க்கு புறப்படுகின்ற படகுச்சேவையானது 9.30க்கு மாற்றப்பட்டதற்கான எந்தவொரு முன்னறிவிப்பும் , வழங்கப்படவில்லை என பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிபிடத்தக்கது.