பெரம்பலூரில் இருமலுக்காக ஊசி போட்ட பெண் மரணமடைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரின் கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன், மெடிக்கல் கடை வைத்துள்ளார்.
டிப்ளமோ மட்டுமே படித்துள்ள கதிரவன், அங்கிருக்கும் கிராம மக்களுக்கு அலோபதி முறையில் சிகிச்சையளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்ச்செல்வி என்பவர் இருமல், சளி பிரச்சனைக்காக சிகிச்சை பெற வந்துள்ளார், அவருக்கு நரம்பு ஊசி போட்டுள்ளார் கதிரவன்.
சிறிது நேரத்திலேயே தமிழ்ச்செல்வி மயக்கம் போட்டு விழ பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவரை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் சென்ற கதிரவன் கதவை தாழிட்டுக் கொண்டு வெளியே வரவில்லையாம்.
தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் சண்டையிட வெளியே வந்த கதிரவன் அவர்களிடம் பேரம் பேசியதாக தெரிகிறது.
தமிழ்ச்செல்வியின் கணவரும் சில மாதங்களுக்கு முன் உயிரிழக்க 4 லட்ச ரூபாய் தருவதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரியவர விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றியதுடன் கதிரவனையும் கைது செய்தனர்.
போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.