உலகில் புத்தாண்டு தினத்தை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்த புத்தாண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 12.01-க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் துவங்கும் போது மக்கள் தங்களுக்கென்று ஒரு சில லட்சியங்களை எடுத்து கொள்வர். அதை ஒரு சிலர் அப்படியே பின்பற்றுவர், பலர் பின்பற்றாமல் போவர்.
அதுமட்டுமின்றி புது ஆண்டின் போது, உலகில் எந்த நாட்டில் முதல் குழந்தை பிறக்கிறது என்ற எதிர்பார்ப்பு நிலவும்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருக்கும் Al Zahra மருத்துவமனையில் 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் திகதி 12.01 மணிக்கு Halima Hassan Al Shamsi மற்றும் Waleed Jumaa Al Muhairi தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இவர்கள் அந்த குழந்தைக்கு ஹாசன் என்று பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. இது 2020-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்த முதல் குழந்தை, அதே போன்று இரண்டாவது பிறந்த குழந்தையும் ஆண் குழந்தை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்த ஆண் குழந்தைக்கு Jad என பெயர் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.