ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள நாடு ருமேனியா. இந்நாட்டின் தலைநகரான புகாரெஸ்ட் நகரில் வசித்து வரும் 66 வயதுடைய மூதாட்டி கணைய புற்றுநோயின் காரணமாக அவதியடைந்து வந்துள்ளார்.
இதனையடுத்து மூதாட்டி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். இவரது உடல்நிலையை சோதனை செய்த மருத்துவர்கள்., அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மூதாட்டிக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. இந்த நேரத்தில் மருத்துவர்கள் ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை உபயோகம் செய்துள்ளனர்.
கிருமிநாசியனியை உபயோகம் செய்த நிலையில்., மிஸ்ரா கத்தியினை பயன்படுத்தி மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை தொடர்ந்து செய்து கொண்டு இருந்த சமயத்தில் ஆல்கஹாலுடன் வினைபுரிந்து மூதாட்டின் மீது தீப்பற்றி இருந்துள்ளது.
இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான மருத்துவர்கள் செய்வதறியாது மூதாட்டியின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தில் மூதாட்டியின் உடலில் 40 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டது.
பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மூதாட்டி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.