இயற்கை எழில் நிறைந்த தீவுகள் அடங்கிய நாடுகளான நியூசிலாந்து நாட்டில் ஆபத்தான எரிமலைகள் இருக்கின்றன. இங்குள்ள எரிமலைகள் அவ்வப்போது வெடித்து சிதறுவதும் வழக்கமான ஒன்று.
கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று திடீரென எரிமலை ஒன்று வெடித்து சிதறியதில் 20 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில்., இந்தோனேசிய நாட்டில் உள்ள மிகப்பெரிய எரிமலையானது வெடித்து சிதற துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியா நாட்டில் இருக்கும் லம்புங் மாகாணத்தில் இருக்கும் அனக் ரகடவ் (Anak Krakatau) எரிமலையானது கடந்த வருடத்தின் போது வெடித்து சிதறியது. அப்போது எரிமலை சீற்றத்தின் காரணமாக சுமார் 5 மீ உயரத்திற்கு கடலில் சுனாமி அலைகள் ஏற்பட்டது.
எரிமலைவெடிப்பு சுனாமியின் காரணமாக சுமார் 430 பேர் பரிதாபமாக பலியான நிலையில்., தற்போது மீண்டும் எரிமலையில் இருந்து 1 கிமீ உயரத்திற்கு சாம்பல்கள் தூக்கி வீசப்பட்டு வருகிறது.
இதனையடுத்து எரிமலை சீற்றம் அதிகரித்துள்ளதால் எரிமலை பரப்பில் உள்ள 2 கிமீ சுற்றளவில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.