தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறி போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு ஊடக மையத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பி.சந்திரகுமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு முதல் மூன்று கட்டமாக பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐந்து வருடத்திற்குள் இலங்கையில் வேலையில்லா பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் இன்று இந்த ஆட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவது போன்று காட்டமுற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.