பிரித்தானியாவில் கார், லாரி மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு ஆண்டுகள் ஒரு பெண் என மூன்று பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தனர்.
லண்டனின் ஹாத்ரோ விமானநிலையத்திற்கு அருகில் இருக்கும் Bedfont சாலை மற்றும் Long Lane இடையிலே இந்த கொர விபத்து நடந்துள்ளது.
இது குறித்து வெளியான தகவலில், இன்று நள்ளிரவு உள்ளூர் நேரப்படி 11.39 மணிக்கு Toyota Yaris கார் மற்றும் Mercedes HGV டிரக் பயங்கரமாக மோதிக் கொண்டதில், காரில் இருந்த 25 மற்றும் 23 வயது மதிக்கத்த ஆண்களும், 20 வயது மதிக்கத்தக்க பெண்ணும் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தனர்.
இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 20 வயது பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இறந்தவர்கள் பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் என்பதால் இதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.
மேலும் அதில் இரண்டு பேர் விபத்து நடந்த முந்தைய நாள் வேலைக்கு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி அதில் இருந்த மற்றவர்களும் விபத்து நடந்த தினத்தன்று வேலைக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலை விபத்தில் தங்களுடன் வேலை பார்த்த ஊழியர் இறந்துவிட்டனர் என்பதை மிகவும் வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இந்த துன்பமான நேரத்தில் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருப்போம் என்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இறந்தவர்கள் எந்த பகுதி? அவர்கள் தாய், தந்தை யார்? அவர்கள் அனைவரும் உள்ளூரை சேர்ந்தவர்களா? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.