2020 ஆம் ஆண்டில் மக்களிடம் வெற்றி பெறக் கூடிய வலுவான ஐக்கிய தேசியக் கட்சியை துரிதமாக உருவாக்க போவதாகவும் சந்திகளில் பேசி, விமர்சனங்களை செய்து, ஊடக கண்காட்சிகளை நடத்தி, கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு – புளுமெண்டல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தோல்வியடைந்த நேரத்தில் இருந்தே வெற்றிக்கான திட்டங்களை வகுப்பது ராஜபக்சவினரிடம் இருந்து கற்றுக்கொள்ளக் கூடிய சிறந்த பாடம். நீதிமன்ற சுதந்திரத்தை மதிக்கின்றோம். தொடர்ந்தும் அரசியல் பழிவாங்கல்கள் நடக்குமாயின் அது நாட்டுக்கு அவமரியாதை.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சில பிரச்சிரனைகள் இருக்கின்றன. கட்சிக்குள் பிரச்சினைகள் இருக்குமாயின் அது குறித்து விசாரித்து ஒரு வாரத்திற்குள் தீர்வை காண வேண்டும்.
இது சந்திகளில் இருந்து பேசும் பிரச்சினைகள் அல்ல. கட்சியில் உள்ள அனைவரையும் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை கட்சிக்குள் தீர்க்க வேண்டும் எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.