யாழ்.நெல்லியடி பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நெல்லியடி, ராஜாராமன் கிராமப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
இதன்போது ஒருவருடைய உடமையில் இருந்து 10 கிராம் கஞ்சா போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அந்தவகையில், கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸார் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



















