தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் மலையகத்தில் போட்டியிடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் உள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலய மண்டபத்தில் நேற்று மாலை இளைஞர், யுவதிகளை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அத்துடன் நாங்கள் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் இந்த தேர்தலில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். எனவும் இது தொடர்பாக நாம் கலந்து பேசி தீர்மானிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான ஒரு தேர்தல் சிறுபான்மை கட்சிகளுக்கு. அந்த தேர்தலில் நாங்கள் எங்களுடைய அங்கத்தினர்களை அதிகரித்துக் கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் சிறுபான்மை கட்சிகள் அனைத்து ஒற்றுமையாக செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாது என அந்த கட்சியின் முக்கிய உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாங்கள் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் இந்த தேர்தலில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் இது தொடர்பாக நாம் கலந்து பேசி தீர்மானிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.