நடிகை நயன்தாராவின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இல்லாதது கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இவர், தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்துவருகிறார்.
நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து எப்பொழுதும் ஒன்றாகவே இருக்கும் இவர்கள் அடிக்கடி வெளிநாடுகள், கோவில்கள் என திடீர் விசிட் அடிப்பதுண்டு. இதனை புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.
இந்நிலையில் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி நயன்தாரா புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஆனால் கடந்த வாரம் கிறிஸ்துமஸ் தினத்தன்று காதலருடன் இருந்த நயன், தற்போது புத்தாண்டில் விக்னேஷ் இல்லாமல் தனியாக கொண்டாடியதால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Happy New Year 2020
pic.twitter.com/6Y9jI3J5WR
— Nayanthara
(@NayantharaU) December 31, 2019