சிறிய மற்றும் நடுத்தர வியாபார கடன்களை மீள அறிவிடுவதனை இடைநிறுத்துமாறு கோட்டாபய அரசாங்கம் அறிவித்திருந்த போதும் அது நடைமுறைக்கு வரவில்லை என கிளிநொச்சி வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அரசாங்கம், அனைத்து நிதி நிறுவனங்களின் தலைவர்களையும் அழைத்து மேற்படி அறிவித்தலை விடுத்திருந்தது.
இவ்வறிவித்தல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டிருந்ததாக நாம் அறிவதாக கூறியுள்ள வர்த்தகர்கள் , இருப்பினும் தங்களது பிரதேசங்களில் இவ்வறித்தல் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இது தொடர்பில் வங்கிகளில் விசாரித்த போது தங்களுக்கு தலைமை காரியாலயங்களிலிருந்து இதுவரை எவ்வித அறிவித்தல்களும் வரவில்லை என அவர்கள் கூருவதாகவும் வர்த்தகர்கள் மேலும் கூறியுள்ளனர்.
இதேவேளை இது தொடர்பில் தமக்கு எவ்வித்தமான சுற்று நிருபங்களும் வரவில்லை என அங்குள்ள வங்கிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.