பதுளை, கொஸ்லந்தை ஊவா மாவேலகம தமிழ்நாடு பிரதேசத்தில் இன்று தனது இரண்டு மகள்களை தூக்கில் இட்டு கொலை செய்ய முயற்சித்து விட்டு, தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கொஸ்லந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் ஒரு மகள் உயிர் தப்பியுள்ளார். மற்றுமொரு மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
20 வயதான திலானி மஞ்சு என்ற இளம் தாயும், அவரது மூன்றரை வயதான மகளுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
வீட்டில் சேலையை பயன்படுத்தி இந்த பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.