இம்முறை கா.பொ.த சாதாரணதரத்திற்கு தோற்றிய 16 வயதான இரு பாடசாலை மாணவிகளுடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நல்லதண்ணி நகரிலுள்ள விடுதியொன்றில் வைத்து நேற்று இரவு நல்லதண்ணி பொலிசாரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வத்தேகம, பன்னில பகுதியில் வசிக்கும் சந்தேகநபரான குறித்த ஆசிரியர், சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்து, நல்லதண்ணியில் தங்கியுள்ளார்.
தந்தை மற்றும் இரண்டு மகள்கள் என விடுதி அறையை பெற்றிருந்த நிலையில், விடுதி மேலாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவர் நல்லதண்ணி பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
இதையடுத்து, விடுதிக்கு வந்து சோதனையிட்ட பொலிசார், அவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் குறித்த மாணவிகள் இருவரும் இம்முறை கா.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றியவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை மேலதிக வகுப்புக்களை நடத்தும் குறித்த ஆசிரியர் மத விவகாரங்களில் ஈடுபடும் சந்தேகத்திற்குரியவர் என்றும், இதற்கு முன்பும் அவர் இரண்டு சிறுமிகளுடன் சிகிரியாவிற்கு சென்றிருந்ததும் பொலிசாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















