கொட்டவெஹர பிரதேசத்தில் சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்களும் சிறுமியின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிக்கவரெட்டியவிற்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் கொட்டவெஹர காவல்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான சிறுமி நிக்கவரெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியின் சிறிய தாயும் அவரின் உறவினர் பெண் ஒருவருமே தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்றைய தினம் நிக்கவரெட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.