இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் தீவிர பயிற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
வரும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் டி-20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, நீயூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளனர்.
இதனால், அனைத்து அணிகளும் இதில், வெற்றிபெறும் முனைப்பில் தீவிரம்காட்டி வருகின்றனர்.
ஐசிசி தரவரிசைபட்டியலில் 5வது இடம் பிடித்துள்ள இந்தியா, 2019ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20- தொடர்களை இழக்காமல் வெற்றி பெற்றது.
இந்நிலையில், 2020ஆம் ஆண்டில் கிரிக்கெட் சீசன் ஆரம்பமே இலங்கையுடன் 3ஆட்டங்கள் கொண்ட குறுகிய டி-20 தொடரில் அமைந்துள்ளது.
முதல், ஆட்டம் குவாஹாட்டில் வரும் 5ஆம் திகதி நடைபெற உள்ளது. இதற்கு இரு அணிகளும் அங்கு முகாமிட்டுள்ளனர்.
அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள்
இந்திய அணியில் அனுபம் நிறைந்த இளம் வீரர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக பந்துவீச்சு வலுவாக உள்ளது. தொடக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. அதே சமயம் அனுபவம் வாய்ந்த ஷிகர் தவன், காயத்தில் இருந்து மீண்டு, அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
பேட்டிங்கில் ராகுல், தவன். கோஹ்லி, ஷிரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
மீண்டும் அணியில் பும்ரா
முதுகு காயத்தால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஆட முடியால் சிகிச்சை பெற்று வந்த பும்ரா டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது வருகை இந்திய பந்து வீச்சுக்கு வலுசேர்க்கும் என்று கருதப்படுகின்றது. சர்துல் தாகுர், நவ்தீப் சைனி வேகப்பந்து வீச்சிலும், சஹல், துபே, ஜடேஜா ஆகியோா் சுழற்பந்து வீச்சிலும் கவனம் செலுத்துவா்.
தடுமாற்றத்தில் இலங்கை
இலங்கையில் இளம் வீரர்கள் இன்னும் வலுவாக இல்லை. மூத்த வீரர் லசித் மாலிங்கா தலைமையில் அந்த அணி இந்தியாவுடன் மோத உள்ளது. குணதிலாக, டிக்வெலா தொடக்க வரிசையிலும், குஸால் பெரைரா 3ஆம் நிலையிலும் ஓராண்டுக்கு பின் மீண்டும் அணிக்கு சேர்கப்பட்ட மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 4ஆம் நிலையிலும் ஆடலாம்.
மலிங்கா, லஹிரு குமாரா, வேகப்பந்து வீச்சிலும், ஹசரங்கா, லக்ஷன் சண்டகன் ஆகியோா் சுழற்பந்து வீச்சிலும் வலு சோ்ப்பா்.
ஆனால் இந்திய அணி தற்போதுள்ள நிலைமையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறுகிய ஓவா்கள் ஆட்டத்தில் தலைசிறந்த அணியாக திகழும் இந்தியாவை எதிா்கொள்வது இலங்கைக்கு மலைப்பான காரியமாகும்.
எனினும் இந்திய மைதான சூழல் இலங்கை வீரா்கள் நன்கறிவா். ஆனால் இது மட்டுமே சாதகமான அம்சமாகும்.
நேருக்கு நோ்
இரு அணிகளும் இதுவரை 16 டி20 ஆட்டங்களில் மோதியதில், இந்தியா 11யிலும், இலங்கை 5-யிலும் வென்றுள்ளன. 2014 டி20 உலகக் கோப்பை இறுதியில் இலங்கையிடம் தோற்றது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.