ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அவமதிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நடந்து கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரியாசன உரையாற்ற நாடாளுமன்றத்திற்கு சென்ற ஜனாதிபதி, அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் கை கூப்பி வணக்கம் தெரிவித்தனர்.
எனினும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மாத்திரம் தனது கைகளை பின்னால் கட்டிக்கொண்டு வணக்கம் கூறாமல் அமைதியாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
தனது உரையின் பின்னர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும் போதும் ஜனாதிபதி, அங்கிருந்தவர்களுக்கு கைகூப்பி தனது வணக்கத்தை தெரிவித்தனர்.இதன்போதும் பாட்டலி சம்பிக்க ரணவக்க மரியாதை செலுத்தமால் இருந்தார் என சுட்டிக்காட்டப்படுகிறது.
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பாட்டலி சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.