திருமணமானவர்களுக்கான உலக அழகு ராணியாக முடிசூட்டப்பட்ட இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் டுவிட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் பதிவொன்று இடப்பட்டுள்ளது.
அந்த பதிவில்,
“வாழ்த்துக்கள் கரோலின் ஜூரி. உங்களையும், உங்கள் குடும்பத்தையும் இன்று மாலை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சிக்கு உரியது.
உங்களுடைய இந்த வெற்றியால் நாம் பெறுமையடைகின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Congratulations Caroline Jurie. It was a pleasure to meet you and your family this evening. We are all proud of you and your great achievement. This is indeed a wonderful achievement for the country. pic.twitter.com/arwDXzAm4o
— Namal Rajapaksa (@RajapaksaNamal) January 3, 2020