இலங்கை அரசியலமைப்பில் கட்டாயம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என மல்பத்து பீடத்தின் முக்கிய பொறுப்பிலிருக்கும் திம்முல் கும்புறே விமலதம்ப தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் நாடாளுமன்றத்தின் தனது முதலாவது உரையை நிகழ்த்தியிருந்தார்.
இதன்போது, நாட்டில் ஏற்பட்டிருக்கும் சிக்கலான நிலைமைகளுக்கு அரசியலமைப்பில் மாற்றத்தினைக் கொண்டுவர வேண்டும் என்றும், அரசியல் பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை மையமாக் கொண்ட நிச்சையம் அரசியலமைப்பு மாற்றப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேரர்,ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பை மாற்றுவதன் மூலமாக தீர்வினைக் காணமுடியும்.
எனவே கட்டாயமாக அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும்.இறுதி யுத்தத்தின் போது நாட்டு மக்கள் எவ்வாறு ஒற்றுமையாக அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தார்களோ அதேபோன்று அரசியலமைப்பு மாற்றத்திலும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும்.
இதேவேளை பொதுமக்கள் மாத்திரமல்லாது எதிர்க் கட்சிகளும் அரசியலமைப்பு மாற்றத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.