அமெரிக்காவின் மில்லேனியம் சேலேஞ் கோப்ரேஷன் உடன்படிக்கையை கிழித்து வீசப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ, பிரதமர் மகிந்த ராஜபக்சவோ எப்போதும் கூறியதில்லை என இராஜாங்க அமைச்சர் ஷேயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கையில் உள்ள நாட்டுக்கு பாதிப்பான ஷரத்துக்களுக்கு இணங்க முடியாது என்றே ஜனாதிபதியும், பிரதமரும் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நிபந்தனைகளின் கீழ் அரசாங்கம் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடாது. உடன்படிக்கையை பற்றி ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகள் கிடைத்த பின்னர், அதில் கையெழுத்திடுவதா, குப்பையில் வீசுவதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் ஷேயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.