அரச நிறுவனங்களில் சேவையை பெற்றுக்கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் கையூட்டுப் பெறும் உத்தியோகத்தர்கள் மற்றும் இடத்தரகர்களை அதே இடத்தில் கைது செய்வதற்கு சிறப்பு நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது என்று அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேல் மாகாணத்தை கேந்திரமான கொண்டு இதற்கென பொலிஸ் பிரிவு ஒன்று செயற்பட்டு வருவதுடன் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் இதன் தலைமை அதிகாரியாக செயற்படுகின்றார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக செயற்படும் இந்த பிரிவில் புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சிலரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களிடம் கையூட்டுப் பெறுவதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் பல நிறுவனங்கள் தொடர்பில் அரசுகு தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசெட ஆலோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப் பட்டள்ளமை குறிப்பிடத் தக்கது.