ஜனாதிபதித் தேர்தலின் போது செய்ய முடியாது போன அர்ப்பணிப்பு ஒன்றை செய்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றால், அதனைச் செய்வதற்கும் தயாராக இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியானது பதவிகளுக்காக உடைந்து போக மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காகும் நபர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை ஏற்பாடுகளை எதிர்க் கட்சித் தலைமைக் காரியாலயம் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.