தமிழில் ஓகே கண்மணி, வாயை மூடி பேசவும் படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான். மலையாள சினிமாவின் ஹீரோவான இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
தற்போது குறூப் என்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் இணைந்துள்ளார். 80களில் கேரளாவில் ரவுடியாக உலா வந்த சுகுமார குறூப்பின் வாழ்க்கையை கொண்டு இப்படம் உருவாகிறது.
இதில் துல்கர் குறூப்பாக நடித்து வருகிறார். ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்குகிறார். வரும் 2020 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட திட்டமாம்.