பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் விரைவில் கிடைக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்னும் 55 நாட்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அனுமதி கிடைத்து விடும்.
அதன்படி, மார்ச் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அந்த சட்டரீதியான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ளது.
அத்துடன் நாடாளுமன்றம் அன்றைய தினம் கலைக்கப்பட்டால் மேலும் 110 நாட்களில்,பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் மாத்தறையில் இடம் பெற்ற கூட்டமொன்றில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலைப் போன்று எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.