உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் வாக்குமூலத்தையும் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) பதிவு செய்யும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (6) நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
சிஐடி சார்பில் முன்னிலையான துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ், இதனை தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சமயத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட ருவான் விஜேவர்தன மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரிடமிருந்து அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
தாக்குதல் சமயத்தில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனா பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார். அவரிடமும் வாக்குமூலம் பெறப்படும் என தெரிவித்தார்.
முன்னாள் ஆளுனர்கள் அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரிடமிருந்து அறிக்கைகள் பதிவு செய்யப்படும் என்றும் துணை சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். இ
பூஜித ஜெயசுந்தர மற்றும் ஹேமசிறி ஆகியோரை ஜனவரி 22 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியானகே உத்தரவிட்டார்