முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதிக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
துஷித குமார என்ற குறித்த சந்தேக நபர், இன்று (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இன்று மீண்டும் அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் (06) முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.