மத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பிரித்தானியாவின் லண்டனுக்கு அனுப்பப்படுகிறது.
சவுதி உள்ளுர் ஊடகத்தின் படி, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது தம்பியான துணை பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மானிடம் இரு நகரங்களுக்கும் சென்று அமைதிக்கு அழைப்பு விடுக்குமாறு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானில் ஹீரோவாகக் கருதப்படும் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவோம் என ஈரான் சபதமிட்டுள்ளது.
இதை தொடர்ந்து பழிவாங்கும் அச்சத்தின் மத்தியில் சவுதி அரேபியா இந்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.
அரசியல் அறிவியல் பேராசிரியர் அப்துல்கலெக் அப்துல்லா கூறியதாவது, வளைகுடாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ள செய்தி தெளிவாக உள்ளது:
மற்றொரு போரின் வலி பிராந்தியத்திற்கு அழிவுகரமானதாக இருக்கும், தயுவு செய்து எங்களை விட்டுவிடுங்கள் என டிரம்பிடம் கோரியுள்ளனர்.
எந்தவொரு இராணுவ மோதலிலும் நாங்கள் தான் முதலில் பாதிக்கப்படுவோம், எனவே விஷயங்கள் கையை மீறி செல்லாமல் பார்த்துக்கொள்வது எங்களின் முக்கிய கடமை என தெரிவித்துள்ளார்.