ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி பெயரை மாற்ற சுரேஷ்பிரேமச்சந்திரன் முற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற நிலையில், புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இந்த மாத இறுதியில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்காக பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
தற்போதுவரை, 70 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, அரசியல் கட்சிகள் சில, இதுவரை தமது கணக்கு அறிக்கைகளை ஒப்படைக்கவில்லை என, தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக, அந்தக் கட்சிகளை இரத்துச்செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.