உயரிய மனித பண்புகளை உடைய பிள்ளைகளை உருவாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி சந்தனா பெண்கள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே பிரதமர் இதனை கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மனூட சமூகம் நாகரீகமான முறையில் வாழ வேண்டுமாயின் உயரிய மனித பண்புகள் மிகவும் அத்தியாவசியமாகும். இன்று பாடசாலைகளில் பிள்ளைகள் அறிவை மாத்திரமே பெற்றுக்கொள்கின்றனர்.
ஆனால் உயரிய மனித பண்புகள் குறித்து போதிக்கப்படுவதில்லை என்பது எனது எண்ணம். ஒரு நாளுக்கான பாடசாலை நேரத்தில் 40 நிமிடங்கள் மட்டுமே மதம் சம்பந்தமான கல்வி மாணவர்களுக்கு போதிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக குறுகிய எண்ணத்தையுடைய சமூகத்தை நாம் உருவாக்குகின்றோம். இதனை மாற்ற வேண்டிய காலம் வந்துள்ளதாக நான் நம்புகின்றேன்.
இந்த நிகழ்வின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.