நிக்வரவெட்டிய மற்றும் கோட்டவேர பொலிஸ் நிலையங்களின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தின் பொறுப்பதிகாரிகள் உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
13 வயது செிறுமியொருவரை இரண்டு பெண்கள் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவத்தின் எதிரொலியாகவே இந்த நீக்கம் இடம்பெற்றது. தாக்குதல் தொடர்பான முறைப்பாட்டை ஏற்க மறுத்த குற்றச்சாட்டிலேயே அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நிக்வரவெட்டிய பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தின் சப் இன்ஸ்பெக்டர் இமாலி லட்சி ஹேமச்சந்திர, கோட்டவேர பொலிஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தின் எஸ்.ஐ.சந்தரேகா அட்டநாயக்க ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
13 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய சிறுமியின் சிறிய தாயாரும், அவரது சகோதரியான கிராம சேவகரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.