அப்பாவி பெண் நாயை கனத்த கல்லில் கட்டி ஆற்றில் தள்ளிய பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து தெரிவித்துள்ள Nottinghamshire சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், “Trent ஆற்றில், நீச்சலடிக்க சிரமப்பட்டு கொண்டு நாய் ஒன்று உயிருக்கு போராடுவதாக தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்று நாயை காப்பாற்ற முயன்ற போது, அதன் உடலுடன் இணைத்து பெரிய கல் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதனை கரைக்கு இழுத்து வந்து மீட்டோம். பின், அதற்கு உணவு வழங்கி அதன் உடலில் பொருத்தப்பட்டிருந்த சிப்பை ஆய்வு செய்தோம்.
அதில், குறிப்பிட்ட பெண் ஒருவர் பெயரில் 2010ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த குறிப்பிட்ட 30 வயது பெண்ணையும், ஒரு ஆணையும் கைது செய்தோம்.
அவர்கள், எதற்காக இந்த அப்பாவி நாயிடம் இப்படி நடந்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
மேலும், பொதுமக்களே அந்த நாயை காக்க காரணமாக இருந்தனர். உரிய நேரத்தில் தகவல் வழங்கியதால் அது இன்னும் உயிருடன் இருக்கின்றது”. என்று தெரிவித்துள்ளனர்.