வெளிநாடு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். துருக்கியிலிருந்து கிரீஸூக்குள் நுழைய முயன்ற அவர், எல்லைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முகவர்களே அவரை அடித்துக் கொன்றிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நெல்லியடி, வதிரியை சேர்ந்த மயில்வாகனம் ரஞ்சன் (38) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
ஐரோப்பிய நாடு ஒன்றிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு, முகவர் ஒருவர் ஊடாக முயற்சித்துள்ளார். கடந்த 24 ம் திகதி துருக்கியில் இருந்து கிறீஸ்லாந்து நாட்டுக்கு நுழைய முற்பட்ட போது அழைத்து சென்ற மாபியா குழுவினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியீடப்பட்டுள்ளது
துருக்கி நாட்டில் இருந்து ஐரோப்பா எல்லை நாடான கிரீஸ் நாட்டுகுள் நுழைவதற்கு நீண்ட தூரம் கடும் குளிரில் நடைப் பயணமாக ஆறு ,மலை, காடுகள் கடக்க வேண்டும். சட்டவிரோத குடியோறிகளை ஆள் கடத்தல் மாபியா குழு அழைத்து செல்வது வழமையான விடயமாகும்
உயிரிழந்த இளைஞனும் ஆள்கடத்தல் மாபியா குழுவினால் கடந்த 24 ம் திகதி துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்குள் நுழைய காட்டுப் பகுதி ஊடாக அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அவர் கிரீஸூக்கு சென்று சேரவில்லை. எல்லை காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக துருக்கி பொலிஸாரால் மீட்டுள்ளார்.