180 பயணிகளுடன் சென்ற உக்ரைன் விமானம் ஈரானில் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Boeing 737 ரக விமானம் ஒன்று 180 பயணிகளுடன் ஈரானின் தலைநகர் Tehran அருகில் சென்ற போது Imam Khomeini சர்வதேச விமான நிலையத்தின் அருகில் விபத்தை சந்தித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tehran விமான நிலையத்தில் இருந்து விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே தொழில் நுட்ப கோளாறு காரணமாக இவ்விபத்து செவ்வாய்க்கிழமை இரவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இது தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த விமான விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.