இந்தூரில் இந்தியாவுக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததற்கான காரணத்தை அணித்தலைவர் மலிங்கா கூறியுள்ளார்.
நேற்று இந்தூர் மைதானத்தில் நடந்த 2வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.
முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி புனேவில் டிசம்பர் 10ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும்.
2வது டி-20 போட்டிக்கு பின் பேட்டியளித்த இலங்கை அணித்தலைவர் மலிங்கா, உதனா எங்கள் முக்கிய பந்து வீச்சாளர், டி-20 போட்டியில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.
நாங்கள் பந்து வீச வெளியே செல்வதற்கு சற்று முன்பு அவர் காயமடைந்தார். இந்தியாவுக்கு எதிரான பந்து வீச்சின் போது அவர் களமிறங்கவில்லை.
உதனா இப்போது குணமடைந்து வருகிறார். நாங்கள் இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், நாங்கள் 25-30 ஓட்டங்கள் குறைவாக எடுத்திருந்தோம். எனினும், சிறப்பாக பந்து வீச முயற்சித்தோம். 18 வது ஓவர் வரை போட்டியை கொண்டு செல்ல பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என மலிங்கா கூறினார்.