ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தன்னை சூழ்ச்சியாளர் எனக் கூறினாலும் தான் அப்படிப்பட்டவர் அல்ல எனவும் இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட குரல் பதிவுகள் அனைத்தையும் பொலிஸார் பெற்று விசாரணை நடத்தி தான் குற்றம் செய்திருந்தால், அதனை நாட்டுக்கு வெளியிடுமாறும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ரஞ்சன் ராமநாயக்கவுடன் முன்னாள் பிரதமர் உரையாடும் தொலைபேசி உரையாடல் தொடர்பாக ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்த குரல் பதிவுகளை பொலிஸார் கைப்பற்றிய போதிலும் தற்போது அவை பொது சொத்தாகமாறி அனைத்து இடங்களிலும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது எனவும் முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.