நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தெரிவுக்குழுவின் விசாரணையின் பின்னர் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டிருந்தாலோ அல்லது நீதித்துறைக்கு எவரேனும் அழுத்தங்களை கொடுத்திருந்தாலோ தகுதி தராதரம் பாராது தண்டனை வழங்க வேண்டும்.
கட்சி என்ற வகையில் ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இன்று அல்லது நாளை அது குறித்து தீர்மானிக்கப்படும்.
எவ்வாறாயினும் இந்த குரல் பதிவுகளை தினமும் வெளியிட்டு மக்களை மயக்கி, உண்மையான பிரச்சினையை மறக்கடிக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.