அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றத்தை தணிக்க இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஈரான் வரவேற்பு தெரிவித்துள்ளது.
ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதையடுத்து ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள், அதன் கூட்டணி படைகள் உள்ள ராணுவ தளம் மீது மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதனால் அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் பல நாடுகளும் இந்த பதற்றத்தை தணிக்க சமாதான முயற்சியில் ஈடுபடுகிறது.
அந்த வகையில் இந்தியாவும் அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை மேற்கொள்கிறது.
இந்தியாவின் இந்த முயற்சியை ஈரான் வரவேற்றுள்ளது.
இது குறித்து டெல்லியில் பேசிய ஈரான் தூதர் அலி செகனி இந்தியா சமாதான முயற்சியில் ஈடுபட்டால் வரவேற்போம்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளேன் என கூறினார்.
மேலும் உலகில் அமைதி நீடிக்க இந்தியா தொடர்ந்து சீரிய பணியாற்றி வருவதாக தெரிவித்த ஈரான் தூதர், இந்தியா சிறந்த நட்பு நாடு என்றும் பதற்றம் அதிகரிப்பதை அது அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.