ஈரான் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
3 கத்யுஷா ராக்கெட்டுகள் பாக்தாத்தின் பசுமை மண்டலத்தில் தாக்கி தீப்பிடித்து எரிந்தன.
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக தூதரகம் தாக்கப்படவில்லை.
எனினும், தூதரகத்தில் எச்சரிக்கை ஒலி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் அமெரிக்க தூதரகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
மேலும், பாக்தாத்தின் பசுமை மண்டலத்தில் ராக்கெட்டுகள் தாக்கியதில் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலை, நேற்று ஈராக்கில் உள்ள இராணுவ தளங்களை ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்திய ஈரான், அதில், 80 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்தது.
மேலும், தாக்குதல் வெற்றிகரமாக நடந்தது என குறிப்பிட்ட ஈரான், தளபதி சுலைமானிக்கான பதிலடி முடிந்தது.
இதற்கு அமெரிக்கா பதிலடி கொடுத்தால் அதை விட மோசமான பதிலடியை நாங்கள் தருவோம், அமெரிக்க படைகள் மத்திய கிழக்கில் இருந்து திரும்ப பெற வேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
இதனையடுத்து பாக்தாத்தில் நடந்த தாக்குதலை ஈரான் தந்திரமாக தனது ஆதரவு பெற்ற போராளிக்கு குழு மூலம் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இரு நாடுகளின் பகையால் ஈராக் தொடர் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கை காப்பாற்ற அமெரிக்கா-ஈரான் இடையேயான பதட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேச நாடுகள் அழைப்பு விடுத்துள்ளது.