வட்டவளை கினிகத்தேனை தியகல – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் தியகல பகுதியில் இன்று வான் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 5 பேர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வான் சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
கம்பளை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்