ஈராக் மற்றும் சிரியா எல்லையில் திடீரென்று ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அதிரடி தாக்குதலில் ஈரான் ஆதரவு போராளிகள் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பேரும் Hashed al-Shaabi துணை ராணுவத்தினர் என தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட ஆளில்லா விமானம் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது மட்டுமல்ல, அந்த விமானத்தை அடையாளம் காணவும் முடியவில்லை என அங்குள்ள அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வகத்தின் தலைவர் ராமி அப்தெல் ரஹ்மானின் கூற்றுப்படி, இந்த தாக்குதல் புக்மல் பகுதியில் உள்ள ஆயுதக் கிடங்குகளை குறி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் அவர் தெரிவிக்கையில், அடையாளம் தெரியாத ஆளில்லா விமானம் ஒன்று பூகமல் பகுதியில் வாகனங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்கியுள்ளது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.