கடந்த அரசாங்க காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த ஈ.டி.ஐ நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ரீ. சித்ரஸ்ரீயின் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதில் ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹந்த கம்லத் மற்றும் சிரேஸ்ட வங்கி அதிகாரி டீ.எம். குணசேகர ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.