பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படி ஹிந்தி பிக்பாஸ் 13வது சீசனில் பங்கேற்றவர் அர்ஹான் கான். இவரது முன்னாள் காதலி Amrita Dhanoa.
அர்ஹான் கான் தன்னிடம் இருந்து 5 லட்சம் ருபாய் ஏமாற்றிவிட்டதாக அம்ரிதா சமீபத்தில் சர்ச்சை புகார் கூறியிருந்தார். மேலும் போலீசில் புகார் அளித்து அவரை சிறையில் தள்ளப்போவதாகவவும் தெரிவித்தார்.
ஆனால் தற்போது அவரே விபச்சார ரெய்டில் போலீசிடம் சிக்கியுள்ளார்.
மும்பையில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் போலீசார் சோதனை செய்தபோது அம்ரிதா தப்பியோட முயற்சித்துள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். அம்ரிதாவுடன் மேலும் ஒரு நடிகை ரிச்சா சிங் என்பவரையும் கைது செய்துள்ளனர்.