அரேபியன் கடலில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர்கப்பலுடன் ரஷ்ய கப்பல் மோத முயற்சிக்கும் வகையில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக ரஷ்ய கடற்படை மீது பென்டகன் குற்றம்சாட்டியுள்ளது.
குறித்த நிகழ்வின் வீடியோவை அமரிக்க கடற்படையின் 5வது பிரிவு வெளியிட்டுள்ளது.
மோதல் குறித்து எச்சரிக்கை வகையில், சர்வதேச கடல் சிக்னலாக ஐந்து முறை ஒலி எழுப்பியதாக அமெரிக்கா கடற்படை தெரிவித்துள்ளது. எனினும், அதை புறகணித்த ரஷ்ய கப்பல் ஆக்ரோஷமாக வேகமாக நெருங்கி வந்துள்ளது.
எனினும், இறுதியில் மிக அருகில் வந்து திசை மாறியதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை மறுத்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்க போர் கப்பலான பாராகுட் தான் தங்கள் பாதையில் குறுக்கிட்டதாக கூறியுள்ளது.
The US Navy’s Bahrain-based Fifth Fleet says that a Russian ship had “aggressively approached” US destroyer USS Farragut, which had then sounded five short blasts and requested the Russian ship alter course, released video footage of the incident shows.https://t.co/EoIJb46Ouh pic.twitter.com/tIXvpQW0Ny
— Al Arabiya English (@AlArabiya_Eng) January 10, 2020
ஈரானுடனான பதட்டங்கள் அதிகரித்ததால் கடந்த ஆண்டு பிற்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலுடன் இணைக்கப்பட்ட குழுவின் பகுதியாக பாராகுட் அப்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.