உக்ரேனிய பயணிகள் விமானத்தை தற்செயலாக சுட்டுக் கொன்றதாக தெஹ்ரான் ஒப்புக்கொண்டதை அடுத்து, ஈரானிய தெருக்களில் போராடும் மக்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
176 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரேனிய விமானம் ஈரானின் ஏவுகணையால் தற்செயலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக, இராணுவ தளபதி நேற்று ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து ஈரானிய பொதுமக்கள் பலரும் தெருக்களில் திரண்டு, இராணுவ தளபதியை பதவி விலக கோரி போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஈரானின் துணிச்சலான, நீண்டகால பொறுமையுள்ள மக்களுக்கு: ‘அதிபராக எனது பதவியின் தொடக்கத்திலிருந்தே நான் உங்களுடன் நின்றேன். எனது நிர்வாகம் உங்களுடன் தொடர்ந்து நிற்கும். உங்கள் ஆர்ப்பாட்டங்களை நாங்கள் நெருக்கமாகப் பின்பற்றுகிறோம். உங்கள் தைரியத்தால் ஈர்க்கப்பட்டுள்ளோம்’ என பதிவிட்டுள்ளார்.
The government of Iran must allow human rights groups to monitor and report facts from the ground on the ongoing protests by the Iranian people. There can not be another massacre of peaceful protesters, nor an internet shutdown. The world is watching.
— Donald J. Trump (@realDonaldTrump) January 11, 2020
அதேபோல மற்றொரு பதிவில், “ஈரானிய மக்களின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் குறித்து மனித உரிமைகள் குழுக்கள் தரையில் இருந்து உண்மைகளை கண்காணிக்கவும் அறிக்கை செய்யவும் ஈரான் அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். அமைதியான எதிர்ப்பாளர்களின் மீது மற்றொரு படுகொலை நிகழ்த்த முடியாது. இணைய முடக்கமும் செய்ய முடியாது. உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
To the brave, long-suffering people of Iran: I’ve stood with you since the beginning of my Presidency, and my Administration will continue to stand with you. We are following your protests closely, and are inspired by your courage.
— Donald J. Trump (@realDonaldTrump) January 11, 2020
இது ஒருபுறமிருக்க ஈரானிய விவகாரங்களில் அப்பட்டமாக தொடர்ந்து தலையிட்டு வரும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, “ஈரானிய மக்களின் குரல் தெளிவாக உள்ளது” எனக்குறிப்பிட்டு ட்விட்டரில் போராட்டத்தின் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
மேலும் ஈரானிய அரசை பொய்கள், ஊழல்கள், திறமையற்ற மற்றும் மிருகத்தனம் வாய்ந்தது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
The voice of the Iranian people is clear. They are fed up with the regime’s lies, corruption, ineptitude, and brutality of the IRGC under @khamenei_ir‘s kleptocracy. We stand with the Iranian people who deserve a better future. pic.twitter.com/tBOjv9XsIG
— Secretary Pompeo (@SecPompeo) January 11, 2020