யாழ்ப்பாணத்தில் புடவை கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான புடவைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
பருத்தித்துறை சந்தைக் கட்டட தொகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடை உரிமையாளர் நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்ற பின்னர் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
இதேவேளை சிசிடிவி காணொளியில் நபர் ஒருவர் கடைக்கு முன்பாக ஓடும் காட்சி பதிவாகியுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு அருகிலிருந்து பெற்றோல் கொள்கலன் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.