ஈராக்கில் ஈரான் ஆதரவு பெற்ற போராளி குழுவின் தளபதி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை பாக்தாத்தில் இருந்து தென்மேற்கே 62 மைல் தொலைவில் உள்ள கர்பலா என்ற நகரத்தில் பிரபல அணிதிரள்வு படைகளின் உயர்மட்ட தலைவர் தலேப் அப்பாஸ் அலி அல்-சைடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் அல்-சைடி ‘படுகொலை செய்யப்பட்டார்’ என்று உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
ஈரான் ஆதரவுடைய ஷியைட் பி.எம்.எப் குழுவில் உள்ள ஒரு பிரிவான கர்பலா படைப்பிரிவின் தளபதியாக அல்-சைதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய தலைமை, துப்பாக்கிச் சூடு குறித்து உடனடியாக பதிலளிக்கவில்லை.
ஜனவரி 3ம் திகதி ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பி.எம்.எஃப் தலைவரான அபு மஹ்தி அல்-முஹாண்டிஸ் மற்றும் ஈரானிய ஜெனரல் குவாசின் சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து அல்-சைதி சுட்டு கொல்லப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.