மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி, மூன்றாம் பிட்டி பாலியாற்றுப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பாலியாற்று பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் வெள்ளாங்குளம் பகுதியில் இருந்து இலுப்பை கடவை நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பாலியாற்றை சேர்ந்த உழவு இயந்திர ஓட்டுனர் காயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தினால் உழவு இயந்திரம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலுப்பை கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.