இந்தியாவில் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைள் வீட்டுக்குள் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் ராஜ்கங்பூரை சேர்ந்தவர் ரஞ்சித் பிரசாத் (35). இவர் மனைவி அல்பனா (30). தம்பதிக்கு 3 வயதில் மகளும், 18 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் நான்கு பேரும் அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் சடலமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் உள்பக்கமாக பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்ற போது நான்கு பேர் சடலங்கள் அருகில் பாத்திரத்தில் பால் இருந்தது.
இதையடுத்து பாலில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு ரஞ்சித்தும், அல்பனாவும் பின்னர் அதை குடித்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.
ஆனால் சம்பவ இடத்தில் இந்தவொரு கடிதமும் இல்லாததால் இவர்களின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
எப்படியிருந்தாலும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்துக்கான சரியான காரணம் தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.